மோடியின் ஆங்கிலத்தை கேலி செய்த டிரம்ப்?

  Sujatha   | Last Modified : 24 Jan, 2018 07:35 am


அமெரிக்க அதிபர்  டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆங்கிலத்தையும், உச்சரிப்பையும் கேலி செய்து மிமிக்ரி செய்ததாக அந்நாட்டின் முன்னணி நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.  

கடந்த வருடம் அமெரிக்கா சுற்று பயணம் மேற்கொண்ட நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர்  டொனால்டு டிரம்ப்பை சந்தித்து நாட்டில் நடந்து வரும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார், குறிப்பாக ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் பிரச்சனைகள் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், மோடியின் ஆங்கிலம், அதன் உச்சரிப்பு,மோடி ஆங்கிலம் பேசும் முறையில், டிரம்ப் மிமிக்கிரி செய்து  பேசியுள்ளார். ஒருநாட்டு பிரதமரின் பேச்சை கேலி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ஆங்கில உச்சரிப்பை டிரம்ப் கேலி செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் சர்ச்சையாகியுள்ளது.      

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close