அமெரிக்க டிரோன் தாக்குதலில் தீவிரவாதி பலி; பாகிஸ்தான் காட்டம்

  SRK   | Last Modified : 25 Jan, 2018 07:52 am


அமெரிக்க ராணுவம் பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தீவிரவாத கும்பலான ஹக்கானி அமைப்பை குறிவைத்து நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த அமைப்பின் முக்கிய தலைவன் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பாகிஸ்தான் நாட்டில் பதுங்கி இயங்கி வரும் ஹக்கானி தீவிரவாத கும்பல், அந்நாடு மட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தானிலும் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையே உள்ள தொடர்பு, அமெரிக்காவுக்கும் அந்நாட்டிற்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை, குர்ராம் பகுதியில், அமெரிக்க தானியங்கி டிரோன்கள் புகுந்து, ஒரு வீட்டை குறிவைத்து குண்டுகள் வீசியது. இதில் அங்கு பதுங்கியிருந்த ஹக்கானி இயக்க தலைவன் கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் அதிகாரிகளோ அந்த வீட்டில் ஆப்கானிஸ்தான் அகதிகள் தங்கியிருந்ததாக தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் பல இடங்களில், ஆப்கான் நாட்டில் இருந்து வந்துள்ள அகதிகளின் முகாம்கள் உள்ளதாகவும், அங்குதான் இதுபோன்ற தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாகவும் பாகிஸ்தான் காரணம் கூறி வருகிறது.

இந்த டிரோன் தாக்குதலை கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை,  தங்கள் அனுமதியில்லாமல் அமெரிக்க இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது என எச்சரித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close