கைதான ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் விடுதலை

  SRK   | Last Modified : 29 Jan, 2018 10:00 am


ரஷ்ய நாட்டின் எதிர்கட்சித் தலைவர்களுள் ஒருவரான அலெக்ஸெய் நவால்னி நேற்று கைது செய்யப்பட்டார். அதிபர் புடினுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் நவால்னி, தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பெரிய பேரணி  நடத்த அழைப்பு விடுத்தார். மாஸ்கோவில் அதிபர் புடினை ஊழல்வாதி என்றும், திருடன் என்றும் விமர்சித்து அவர் கோஷங்களை எழுப்பினார்.

உடனே அங்கிருந்த போலீசார், நவால்னியை கைது செய்தனர். அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக ரஷ்ய போலீசார் தெரிவித்துள்ளனர். பல நகரங்களில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வந்த நிலையில், சிறிது நேரத்திற்கு பின் நவால்னி விடுவிக்கப்பட்டார்.  

சமீபத்தில் நவால்னி அதிபர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. வரும் அதிபர் தேர்தலில் மீண்டும் புடின் போட்டியிடவுள்ளதால், தேர்தலை புறக்கணிக்குமாறு மக்களுக்கு நவால்னி கோரிக்கை வைத்து வருகிறார். ஆனால், சுமார் 80% மக்கள் புடினுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மீண்டும் அவர் அதிபராவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close