இந்திய - அமெரிக்க உறவுக்கு வானமே எல்லை: நிக்கி ஹேலி

  SRK   | Last Modified : 01 Feb, 2018 03:02 pm


இந்தியா அமெரிக்கா இடையேயான உறவுக்கு வானமே எல்லை என அமெரிக்காவின் ஐ.நா தூதர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார். 

இந்திய தூதர் நவஜெத் சிங் சர்னா, சாதனை படைத்த அமெரிக்க இந்தியர்களை விருந்துக்கு அழைத்திருந்தார். 

இந்திய பூர்வீகம் கொண்ட அமெரிக்கரான ஹேலி, இதில் பேசியபோது, அதிபர் டிரம்ப்பின் முயற்சிகள் போல, பிரதமர் நரேந்திர மோடியின் கீழ், இந்தியாவில் பல அதிரடி பொருளாதார மாற்றங்கள் நடந்து வருவதாக குறிப்பிட்டார். 

தான் டிரம்ப்பின் அரசுக்கும் வந்த பிறகு, இந்தியா அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வளர்க்க கடுமையாக முயற்சித்து வருவதாக தெரிவித்தார். கடந்த இரண்டு அதிபர்கள் ஆட்சியில் இதுபோல இல்லையென்றும் ஹேலி கூறினார். 

"இரண்டு நாடுகளின் கொள்கைகளும் ஒரே பக்கம் தான் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் உறவை நாம் பார்க்கிறோம். இதற்கு வானம் தான் எல்லை" என்று ஹேலி கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close