வெடிக்கும் குவாட்டமாலா எரிமலை; பொதுமக்கள் ஓட்டம்

  SRK   | Last Modified : 02 Feb, 2018 09:54 am


மத்திய அமெரிக்க நாடான குவாட்டமாலாவில் உள்ள ஃபுவேகோ எரிமலை தொடர்ந்து தீ பிழம்பை கொப்பளித்து வருகிறது. இதனால், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சுமார் 300 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு அதிகமாக இந்த எரிமலை நெருப்பை கக்கி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த எரிமலை கொப்பளிப்பால் உருவான சாம்பல் மண்டலம், அருகே உள்ள எஸ்குவின்ட்லா, சீமால்டெனான்கோ உள்ளிட்ட பல ஊர்களை சூழ்ந்துள்ளதாம். இதனால், சுமார் 46,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 


இந்த பகுதிகளில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலோடெனான்கோ என்ற ஊரில் மட்டும் அதிகபட்ச எச்சரிக்கையான சிகப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு எரிமலை தாக்கத்தால், சாலை நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நகர முடியாமல் உள்ளன. இந்த பகுதிகளில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அந்நாட்டு பேரிடர் மீட்புக் குழு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close