பள்ளியில் 12 வயது சிறுமி துப்பாக்கிச் சூடு!

  SRK   | Last Modified : 02 Feb, 2018 11:53 am


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு பள்ளியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5 மாணவர்கள் காயமடைந்தனர்.

துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த 12 வயது சிறுமி, இந்த விவகாரத்தில் கைது  செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த 5 மாணவர்களில், 2 பேர் மீது குண்டு பாய்ந்த நிலையில், அதன் துகள்கள் 3 பேர் மீது தாக்கியது. ஒருவருக்கு தலையில் அடிபட்டதாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக எந்த மாணவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என கூறப்பட்டுள்ளது. 

பள்ளியில் இருந்த மாணவர்கள் இது தற்செயலாக நடந்த சம்பவம் என கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

"12 வயது சிறுமி ஒருவரை கைது செய்து, சிறுவர்களுக்கான தடுப்பு மையத்தில் வைத்துள்ளோம்" என போலீசார் தெரிவித்துள்ளார். இது தற்செயலாக நடந்த சம்பவம் தானா என உறுதி செய்ய அவர்கள் மறுத்துள்ளனர்.

அமெரிக்காவில் துப்பாக்கி தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த மாதம் கென்டக்கி மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close