மாலத்தீவுகளில் அவசர நிலை பிரகடனம்!

  SRK   | Last Modified : 05 Feb, 2018 10:18 pm


உச்ச நீதிமன்றத்துக்கும், மாலத்தீவுகள் அதிபர் அப்துல்லா யமீனுக்கும் இடையே எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, அந்நாட்டில் அவசர நிலையை அவர் பிரகடனப்படுத்தியுள்ளார்.

தன்னை நாடாளுமன்றம் ஒன்று கூடி பதவிநீக்கம் செய்துவிடக் கூடாது என்ற காரணத்திற்காக, நாடாளுமன்ற கட்டிடத்துக்கு சீல் வைக்க அவர் ராணுவத்திற்கு உத்தரவிட்டார். தன்னை எதிர்க்கும் எதிர்கட்சியினரை சிறையில் அடைக்க அவர் உத்தரவிட்ட நிலையில், 2 எம்.பி.க்கள் உட்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் சிறைவைக்கப் பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அதற்கு அதிபர் மறுத்துவிட்டார்.

இந்நிலையில், இன்று அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்துவதாக அவர் அறிவித்துள்ளார். 15 நாட்களுக்கு இந்த அவசர நிலை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, எதிர்கட்சியினரை அவர் உத்தரவின் பேரில் போலீசார் கைது செய்து வைத்திருக்கும் நிலையில், தற்போது முழு அதிகாரமும் பெற்றுள்ளதால், மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close