இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனையில் சீனா வெற்றி!

  முத்துமாரி   | Last Modified : 06 Feb, 2018 05:00 pm


நடுவானில் இடைமறித்துத் தாக்கும் ஏவுகணை சோதனையைச் சீனா வெற்றிகரமாக நடத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. 

ஒவ்வொரு நாடும் தங்கள் பாதுகாப்புக்காக அணு ஆயுதம், ஏவுகணைகளைப் போட்டி போட்டுக்கொண்டு தயாரித்து வருகின்றன. இந்த ஏவுகணைகளை வைத்து எதிரிநாட்டின் மீது தாக்குதல் நடத்த முடியும். அதேநேரத்தில், எதிரி நாட்டில் இருந்து வரும் ஏவுகணைகளை எப்படித் தடுப்பது என்றும் தீவிர ஆராய்ச்சி செய்து வருகின்றன. அந்த வகையில், எதிரி நாடு செலுத்தும் ஏவுகணைகளைத் தாக்கி அளிக்கும் வல்லமை கொண்ட HQ 9 என்ற ஏவுகணை தொழில்நுட்பத்தைச் சீனா மேம்படுத்தி வருகிறது. மேம்படுத்தப்பட்ட இந்த ஏவுகணையைச் சீனா இன்று சோதனை செய்துள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள கோர்லா சோதனைத் தளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை வெற்றிகரமாக இலக்கைத் தாக்கியுள்ளது. 

மற்ற பகுதிகளில் இருந்து வரும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வளிமண்டலத்துக்குள் நுழையும் முன்னரே இது தாக்கி அழித்து விடும் வல்லமை கொண்டது என்று கூறப்படுகிறது. இதுகுறித்துச் சீனாவின் பாதுகாப்புத்துறை தெரிவிக்கையில், "நாட்டின் பாதுகாப்புக்காக மட்டுமே இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. எந்த நாட்டையும் தாக்கும் நோக்கத்துடன் ஏவுகணை சோதனை நடத்தவில்லை" எனக் கூறியுள்ளது.

இந்தியா அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் அக்னி 1 ஏவுகணையை மீண்டும் பரிசோனை செய்துள்ள நிலையில், சீனாவின் ஏவுகணை பரிசோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close