ரஷ்யா மீண்டும் தாக்குவது உறுதி: அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்

  SRK   | Last Modified : 07 Feb, 2018 09:57 pm


அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லரசன், ரஷ்யா மீண்டும் தங்கள் நாட்டு தேர்தலில் குறுக்கிடுவார்கள் என எச்சரித்துள்ளார்.

கடந்த 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யா ஹேக்கர்கள் குறுக்கிட்டு, வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் ஈமெயில் கணக்குகளை ஹேக் செய்து, அவரது ஈமெயில்களை வெளியிட்டனர். இது ஹிலாரிக்கு பெரும் பின்னடைவை கொடுத்த நிலையில், அதிபர் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற சாதகமாக அமைந்தது.

அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள், மீண்டும் ரஷ்யா தேர்தலில் குறுக்கிட வாய்ப்பு அதிகம் என கூறிவரும் நிலையில், தற்போது பாதுகாப்புத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனும் அதை ஒப்புக்கொண்டுள்ளார்.

தேர்தலில் குறுக்கிட்டதற்காக, அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தார். மேலும் சில தடைகளை விதிக்க அமெரிக்க நாடாளுமன்றம் முடிவெடுத்த நிலையில், அதற்கான மசோதா பெரும்பான்மையோடு நிறைவேறியது. ஆனால்,  அதை செயல்படுத்த அதிபர் டிரம்ப் மறுத்துவிட்டார். இது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. 

இந்நிலையில், இதுகுறித்து பேசிய ரெக்ஸ் டில்லர்சன், "ரஷ்யா மீண்டும் தேர்தலில் குறுக்கிடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். அவர்கள் முடிவெடுத்தால் மீண்டும் இதேபோல செயல்படுவார்கள். அதை நம்மால் கணிக்க முடியாது. ஆனால்,  அதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close