பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசினார் டிரம்ப்

  SRK   | Last Modified : 09 Feb, 2018 08:56 am


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு பேசினார். முக்கியமாக மாலத்தீவுகள் நாட்டில் நடந்து வரும் பிரச்னை குறித்து கேட்டறிந்த டிரம்ப், பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டு தலைவர்களும், மாலத்தீவுகளில் நடந்து வரும் ஜனநாயக பிரச்னை குறித்து முக்கியமாக பேசியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியா அமெரிக்கா இடையே உள்ள பொருளாதாரா கூட்டணி பற்றியும், பாதுகாப்பு குறித்தும் அவர்கள் பேசியதாக தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள், அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பில் பல விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்..

மேலும், ஆப்கானிஸ்தான் தீவிரவாத பிரச்னை, வடகொரியாவின் அணு ஆயுத பிரச்னை, மியான்மரின் ரோஹிங்கியா பிரச்னை ஆகியவை குறித்தும் இருவரும் பேசினார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close