கொரியரில் இருந்த உயிருள்ள புலிக்குட்டி

  Sujatha   | Last Modified : 10 Feb, 2018 07:38 am


கொரியர் மூலம் உயிருள்ள புலிக்குட்டி அனுப்பி வைக்கப்பட்டது  கண்டு பிடிக்கப் பட்டுள்ளது

மெக்சிகோ நாட்டில் உள்ள ஜாலிஸ்கோ நகரில் கொரியர் பார்சல்கள் வந்துள்ளன. அந்த நாட்டு வழக்கப்படி பார்சல்களை மோப்ப நாய் மூலம் போலீஸார் சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு குறிப்பிட்ட பார்சலை பார்த்து மோப்ப நாய் குறைத்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார், பார்ஸலை பிரித்துள்ளனர். அதை பார்த்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி.

எக்ஸ்பிரஸ் மெயில் மூலம் அனுப்பட்டிருந்த அந்த பார்சலின் உள்ளே இருந்த நீல பிளாஸ்டிக் பெட்டியினுள் ஒரு உயிருள்ள புலிக்குட்டி ஒன்று மயங்கிய நிலையில் இருந்துள்ளது. மயக்க ஊசி போட்டு அனுப்பப்பட்டிருந்ததாலும், உணவு இல்லாததாலும் அந்த குட்டி மிகுந்த களைப்புடன் இருந்துள்ளது.  இதனை காவல்துறையினர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இவ்வாறு சட்ட விரோதமாக புலிக்குட்டி அனுப்பியவரை பற்றி காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையின் கீழ் உள்ளது.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close