தீவிரவாதத்தை ஒழிக்க ராணுவம் மட்டும் போதாது: இந்தியா, ஐக்கிய அரபு நாடுகள்

  SRK   | Last Modified : 12 Feb, 2018 12:06 pm


தீவிரவாதத்தை ஒழிக்க ராணுவம் மட்டும் போதாது என்றும், தீவிரவாத கொள்கைகளை சமூக வலைதளங்களில் பரவ விடுவதைத் தடுக்க வேண்டும் என்றும் இந்தியாவும் ஐக்கிய அரசு நாடுகளும் கூட்டாக தெரிவித்துள்ளன.

ஐக்கிய அரபு நாடுகள் சென்ற பிரதமர் மோடி, அபுதாபி இளவரசர் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் துணை கமாண்டர் ஷேக் முகம்மது பின் சாயத் அல் நயனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டு அதிகாரிகளும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.

அதன்பிறகு, இரு நாடுகளும் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதில், பலதரப்பட்ட மக்களை கொண்டுள்ளதால், தீவிரவாத கொள்கைகளுக்கு எதிரான சிறந்த எடுத்துக்காட்டாக இந்தியாவும் ஐக்கிய அரபு நாடுகளும் விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தீவிரவாதத்தை ஒழிக்க ராணுவம் மட்டும் போதாது என்றும், தீவிரவாத கொள்கைகளை சமூக வலைதளங்களில் பரவ விடுவதையும் கண்டுபிடித்து நீக்க புதிய யுக்திகளை கையாள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதக் கொள்கைகளை பரப்பும் பேரில் தீவிரவாதத்தை பரவ விட்டும், இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்ற முயற்சிக்கும் செயல்பாடுகளையும் வேரோடு அழிக்க வேண்டும் என்றும் இரு தரப்பும் உறுதிபூண்டுள்ளன.

அத்துடன், தீவிரவாதத்தை பரவ விட்டு மற்ற நாடுகளுக்கு எதிராக பயன்படுத்தும் நாடுகளுக்கும் அந்தக் கூட்டறிக்கையில் கடும் கண்டனம் விடுக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close