தூங்கி எழுந்தபின் பாஷயை மறந்த பெண்! அமெரிக்காவில் வினோதம்

  SRK   | Last Modified : 14 Feb, 2018 04:28 pm


அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த பெண்ணுக்கு வினோதமான ஒரு நோய் ஏற்பட்டுள்ளது. கடும் தலைவலி ஏற்பட்ட அவருக்கு, அதன்பின் தனது சொந்த பேச்சு வழக்கே மறந்து போன ஆச்சர்யம் நிகழ்ந்துள்ளது. 

அரிசோனாவில் வசித்து வந்த 45 வயதான மிஷல் மயர்ஸ் என்ற பெண்ணுக்கு  7 குழந்தைகள். சில  வருடங்களுக்கு முன் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. கடும் தலைவலி ஏற்பட்டதை தொடர்ந்து, தூங்கியிருக்கிறார். எழுந்து பார்த்தபோது, பக்க வாதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் அவருக்கு மூளை பிரச்னை அல்லது பக்கவாதம் காரணமாக பேச்சிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறியுள்ளனர். 

அன்று அவர் பேச முயற்சித்த போது, வார்த்தைகளை சம்பந்தமே இல்லாமல் மாற்றி பேசியதாக கூறுகிறார். "மூளையில் ஏதோ பிரச்னை ஏற்பட்டது போல இருந்தது. நான் நினைத்தது வேறு, ஆனால் நான் உச்சரித்த வார்த்தைகள் வேறு" என்றார் மயர்ஸ். 


பின்னர் அவர் தெளிவாக பேசத் துவங்கிய போது, அவரது பேச்சு வழக்கு மாறியிருந்ததாம். வழக்கமாக அமெரிக்காவில் தெற்கு பகுதியில் உள்ள அரிசோனாவில் பேசும் ஆங்கில பேச்சுவழக்கிற்கு மாறாக, பிரிட்டன் நாட்டவரை போல பேசியிருக்கிறாராம். இதைக் கண்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். "எவ்வளவு முயற்சித்தும் சாதாரணமாக என்னால் பேசமுடியவில்லை" என்று கூறினார் மயர்ஸ். அவரை மேலும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு 'வெளிநாட்டு பேச்சுவழக்கு நோய் ' இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

கடந்த 100 ஆண்டுகளில் வெறும் 60 பேருக்கு மட்டுமே இதுபோன்ற நோய் இருந்ததாம். இன்று வரை மயர்ஸ் தொடர்ந்து பிரிட்டன் வழக்கில் பேசி வருகிறாராம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close