'துப்பாக்கிச் சூடு நடத்தப் போகிறேன்' முன்கூட்டியே எச்சரித்த பள்ளி மாணவன்

  SRK   | Last Modified : 16 Feb, 2018 09:16 am


அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில், 17 பேர் கொல்லப்பட்டனர். அந்த பள்ளியில் படித்து வந்து, சமீபத்தில் நீக்கப்பட்ட நிகோலஸ் க்ரூஸ் என்றார் மாணவன், கனரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டான். சம்பவ இடத்திலேயே போலீசாரிடம் அவன் சரணடைந்தான்.

அந்த மாணவனின் நடவடிக்கைகள் பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு, அதே மாணவனின் பெயரில் யூடியூப் இணையதளத்தில் சந்தேகப்படும் படியான கருத்துக்களை ஒருவர் பதிவு செய்திருந்தது தெரிய வந்துள்ளது. யூடியூப்பில் தொடர்ந்து வீடியோ பதிவேற்றம் செய்து வரும் பென் பென்னைட் என்பவர், தனது வீடியோ ஒன்றில், நிகோலஸ் க்ரூஸ் என்ற பெயரில் "மிகப்பெரிய அளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்போகிறேன்" என எழுதப்பட்டிருந்த ஒரு கமென்ட்டை கண்டு அதிர்ந்துள்ளார். 

கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க உளவுத்துறை எஃப்.பி.ஐ-யை தொடர்பு கொண்டு பென் புகார் அளித்துள்ளார். அதிகாரிகள் பென்னை நேரில் சந்தித்து இதுகுறித்து கேட்டறிந்தனர். ஆனால், அப்போது கமென்ட் எழுதிய நிகோலஸ் க்ரூஸ் என்ற கணக்கின் சொந்தக்காரர் யார் என கண்டுபிடிக்க முடியாததால்,  அதை அப்படியே விட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதை எஃப்.பி.ஐ அதிகாரிகள் அந்த பகுதியின் போலீஸ் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close