மெக்சிகோவில் மிகப் பயங்கர நிலநடுக்கம்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 17 Feb, 2018 09:31 am

மெக்சிகோவில் இன்று மிகக் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் அது 7.5 ஆகப் பதிவாகி உள்ளது. இதனால், கட்டிடங்கள் ஆடின. சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். மருத்துவமனை, அலுவலகம் என அனைத்து கட்டிடங்களில் இருந்தும் மக்கள் வெளியேறினர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மிகக் கடுமையான நில அதிர்வுகளும் அங்கு அவ்வப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மக்கள் சாலைகளில் திரண்டதால் போக்குவரத்து மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நில அதிர்வும் தொடர்ந்து ஏற்படுவதால் மக்கள் சாலையில் இருந்தபடி, அவ்வப்போது தங்கள் மொபைல் போன்களில் நிலநடுக்கம் தொடர்பான எச்சரிக்கைத் தகவல்களைப் பார்த்து வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. பொருட்சேதம் பற்றிக் கணக்கீடு நடந்து வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close