மெக்ஸிகோவில் மீண்டும் நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி!

  முத்துமாரி   | Last Modified : 20 Feb, 2018 11:35 am


மெக்ஸிகோவில் இரண்டாவது முறையாக நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். 

கடந்த பிப்ரவரி 17 அன்று மெக்ஸிகோ நகரில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 என்ற அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் எந்த உயிர்ப்பதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் அதிக அளவிலான பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், நிலநடுக்க மீட்புப்பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போது, அந்த பகுதியில் வந்த ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது மெக்ஸிகோவில் பனிமூட்டம் நிகழ்வதால் மீட்புப்பணிகள் மெதுவாகவே நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நேற்று மீண்டும் அப்பகுதியில் சிறிதாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.9 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கியதும் பொதுமக்கள் அனைவரும் சாலையில் தஞ்சமடைந்தனர். இதனால் உயிர் பாதிப்பு எதுவும் இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்க மீட்புப்பணிகள் முடிவடையாத இந்த நேரத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது  மெக்ஸிகோ நகர மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close