அதிபர் டிரம்ப்பின் மகன் ஜூனியர் டிரம்ப் இந்தியா வந்தார்!

  முத்துமாரி   | Last Modified : 20 Feb, 2018 02:44 pm


ஒருவாரம் தொழில்முறைப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் ஜூனியர் டிரம்ப் இந்தியா வருகை தந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு சொந்தமான நிறுவனங்கள் இந்திய முதலீட்டாளர்களுடன் வர்த்தகம் மேற்கொண்டு வருகின்றன. தற்போது மிகப்பிரம்மாண்டமான குடியிருப்பு கட்டிடங்களை ஏற்படுத்தும் பொருட்டு 'டிரம்ப் டவர்ஸ்' என்ற திட்டத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது அந்நிறுவனம். அதற்கான கட்டுமான பணிகளை ஆய்வு செய்யும் பொருட்டும், இன்னும் அதிகப்படியான வர்த்தக முதலீடுகளை பெருக்கவும் அதிபர் டிரம்ப்பின் மகன் ஜூனியர் டிரம்ப் இன்று இந்தியா வந்துள்ளார். 


இந்தியாவின் தொழில் முதலீட்டாளர்களை சந்திக்க உள்ள அவர் வெளியறவு வர்த்தக கொள்கைகள் குறித்து வருகிற 23ம் தேதி டெல்லியில் நடைபெறும் உலக வர்த்தக மாநாட்டில் உரையாற்ற இருக்கிறார். மேலும், மும்பை சென்று அங்கு இந்தியாவின் முக்கிய வர்த்தக முதலீட்டாளர்களை சந்தித்து பேசுகிறார்.

தொடர்ந்து கொல்கத்தா, புனே ஆகிய தொழில் நகரங்களுக்கும் செல்கிறார். இதன்மூலம் அமெரிக்க-இந்திய வர்த்தகம் மேம்படும் என தொழில் முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதவிர டிரம்ப் டவரில் குடியிருப்புகளை பதிவு செய்யும் நபர்கள் ஜூனியர் டிரம்ப்புடன் இரவு நேர விருந்தில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close