நைஜீரியா பல்கலைக்கழகத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்

  SRK   | Last Modified : 21 Feb, 2018 09:59 am


நைஜீரியா நாட்டின் போர்னோ பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் நேற்று ஒரு தீவிரவாதி தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தினான். ஆனால்,  அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். 

போர்னோவில் உள்ள மைடுகுரி பல்கலைக்கழகத்தில் நேற்று அதிகாலை பயங்கர குண்டு வெடித்தது. அது ஒரு தற்கொலை குண்டு தாக்குதல் எனவும், உடல் முழுக்க வெடிகுண்டுகளுடன் வந்த ஒரு தீவிரவாதி இந்த சம்பவத்தை நிகழ்த்தியதாகவும் தெரிய வந்துள்ளது. 

இந்த சம்பவத்தில் பலியான தீவிரவாதியை தவிர வேறு யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு காரணமாக கருதப்படுகிறது. 

கடந்த வருடம் இதே பல்கலைக்கழகத்தில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் பலர் உயிரிழந்தனர். நைஜீரியாவில், ஐ.எஸ் அமைப்பின் கிளையாக மாறியுள்ள போகோ ஹராம், உலகின் மிக மோசமான தீவிரவாத அமைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இவர்கள் நடத்திய தாக்குதல்களால் கடந்த 9 ஆண்டுகளில் நைஜீரியாவில் சுமார் 20,000 பேர் பலியாகியுள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close