ஃப்ளோரிடா துப்பாக்கிச்சூடு; 'பம்ப் ஸ்டாக்ஸ்' இயந்திரத்திற்கு தடை விதித்த டிரம்ப்

  முத்துமாரி   | Last Modified : 21 Feb, 2018 05:32 pm


ஃப்ளோரிடா மாகாண துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 'பம்ப் ஸ்டாக்ஸ்' இயந்திரத்திற்கு தடை விதிக்கும் மசோதாவில் இன்று கையெழுத்திட்டுள்ளார். 

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணம் பார்க்லாண்ட் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 14ம் தேதி துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் துப்பாக்கியில் 'பம்ப் ஸ்டாக்ஸ்' இயந்திரம் தான் பயன்படுத்தப்பட்டிருந்தது என தகவல் தெரிவிக்கப்பட்டது.

'பம்ப் ஸ்டாக்ஸ்' என்பது தானியங்கி துப்பாக்கிகளை இயந்திர துப்பாக்கியாக மாற்றி செயல்பட வைக்கும் ஒரு இயந்திர பாகம் ஆகும். இது அமெரிக்க சந்தைகளில் குறைந்த விலையிலே கிடைக்கிறது. எனவே இது போன்ற சம்பவங்களில் இவை பயன்படுத்துவதால்  'பம்ப் ஸ்டாக்ஸ்' ரகத்தை தடை செய்யும் பொருட்டு அமெரிக்காவில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close