'உளவியல் தந்தை' ஃப்ராய்ட் எழுதிய கடிதங்கள் ஏலம்!

  PADMA PRIYA   | Last Modified : 05 Mar, 2018 06:03 pm

உளவியல் தந்தை என பரவலாக அழைக்கப்படும் பண்டைக்கால மனோதத்துவ மருத்துவர் சிக்மண்ட் ஃப்ராய்ட், தன் மாணவிக்கு எழுதிய 2 கடிதங்கள் ஏலத்துக்கு வருகின்றன.

மனோதத்துவ துறையில் தலைசிறந்த பல சாதனைகளை படைத்து, புதிய யுக்திகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் சிக்மண்ட் ஃப்ராய்ட். இவர் எலிஸ் ரெவ்ஸ் என்ற தனது முன்னாள் மாணவிக்கு எழுதிய இரு கடிதங்கள் வரும் 7-ஆம் தேதி அமெரிக்காவில் ஏலத்துக்கு வருகின்றன.


எலிஸ் நோய்வாய்ப்பட்டிருந்த சமயத்தில் ஃப்ராய்ட் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதம் ஜனவரி 25, 1923 என்ற தேதியிட்டு எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு சில நாட்கள் முன்பே எலிஸ் உயிரிழந்துவிட்டார்.

பின்னர் இதனை அறிந்து அவரது கணவருக்கு ஆறுதல் கூறி மற்றொரு கடிதத்தையும் ஃப்ராய்ட் எழுதியுள்ளார். அந்தக் கடிதம் பிப்ரவரி 2,1923 என்ற தேதியிட்டு எழுதப்பட்டுள்ளது.

ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட இந்த இரு கடிதங்களில் ஃப்ராய்ட் (Freud)என்று அவர் கையொப்பமிட்டுள்ளார்.  இவற்றை மறைந்த எலிஸின் கணவர் ஏலமிடுவதாக அறிவித்துள்ளார். இவை இந்திய மதிப்பில் ரூ.9 லட்சம் வரை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close