அத்துமீறுகிறது பாகிஸ்தான் - ஐ.நாவில் இந்தியா சரமாரி குற்றச்சாட்டு

  PADMA PRIYA   | Last Modified : 09 Mar, 2018 11:06 am

காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பாகிஸ்தான் மனித உரிமையை மீறுகிறது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா மீது குற்றச்சாட்டுகளை வைத்தது. 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலின் 37-வது கூட்டம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐ.நா உறுப்பினர் நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அப்போது கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதிநிதி பேசுகையில், காஷ்மீரில் பெருமளவு மனித உரிமைகள் மீறல், இனவாத மோதல்கள் உள்ளிட்டவைகள் நடப்பதாக இந்தியா மீது சரமாரி குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய தரப்பில் பங்கேற்ற தேவி கும்மம், "பாகிஸ்தான் கூறுவது உண்மை இல்லை. அது எங்கள் உள்நாட்டு விவகாரம். ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பலுசிஸ்தான், சிந்து போன்ற பகுதிகளில் பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கைகளும் மனித உரிமைகள் மீறல்களையும் பற்றி இந்த உலகம் அறியும்.

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்திய பாதுகாப்பு படைமீது அத்துமீறி தாக்குதல் நடத்துவதும் பயங்கரவாதிகளின் ஊடுருவலும் இந்தியாவிற்கு பெரும் இடையூறாகவே இருந்து வருகிறது " என்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close