ரோஹிங்கியா மக்களின் கிராமங்களில் ராணுவ தளங்களை உருவாக்கும் மியான்மர்

  SRK   | Last Modified : 12 Mar, 2018 08:04 pm


மியான்மர் அரசு தற்போது ரோஹிங்கியா இன மக்கள் வாழ்ந்த பகுதிகளில் ராணுவ தளங்களை உருவாக்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு மியான்மர் நாட்டின் அரசு, தீவிரவாதிகளை ஒடுக்குவதாக கூறி, ரோஹிங்கியா இன மக்கள் இருந்த வடக்கு ரக்கைன் பகுதியில் சோதனை நடத்த உத்தரவிட்டது. இந்த சோதனைகளின் போது, அப்பாவி ரோஹிங்கியா இன மக்களை மியான்மர் ராணுவம் கொத்து கொத்தாக கொன்றதாக தகவல்கள் வெளியானது. 

தீவிரவாதிகளை பிடிக்கும் போர்வையில், ஒடுக்கப்பட்ட ரோஹிங்கியா மக்களை அவர்கள் இருப்பிடங்களில் இருந்து மியான்மர் ராணுவம் விரட்டி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. மியான்மர் ராணுவத்தின் செயல்களால், சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா இன மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தனர்.

சர்வதேச அளவில் பல நாடுகள் மியான்மர் அரசுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது செயற்கைக்கோள் புகைப்படங்களின் படி, ரோஹிங்கியா மக்கள் இருந்த பகுதிகளில் மியான்மர் ராணுவத்தின் செயல்பாடுகள் அதிக அளவில் இருப்பதாக தெரிகிறது. அங்குள்ள வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு, ராணுவ தளங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக சர்வதேச அம்னெஸ்டி அமைப்பு தெரிவித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close