சிரியா: கிழக்கு கூட்டா தாக்குதலில் 78 பேர் பலி

  SRK   | Last Modified : 17 Mar, 2018 02:03 am


சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில் அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில், நேற்று மட்டும் 78 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

சிரிய ராணுவம் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களால், கூட்டா பகுதியில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் பொதுமக்கள் அதிக அளவு வெளியேற துவங்கிய நிலையில், நேற்று தொடர் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. 

இதில் 78 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் 13 பேர் குழந்தைகள் என தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் கூட்டாவின் க்பார் பட்னா என்ற பகுதியில் அரசு படைகளின் தாக்குதல்கள் மையம் கொண்டன. 

கடந்த 3 வாரங்களில் சுமார் 1500 பேர் கூட்டா பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.நா-வின் பாதுகாப்பு கவுன்சில் ஒரு மாத காலம் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்திய நிலையில், அதை மதிக்காமல் சிரிய அரசு தொடர் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close