மீண்டும் ஒரு அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு

  SRK   | Last Modified : 20 Mar, 2018 07:48 pm


அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள உயர்நிலை பள்ளியில், இன்று திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 2 மாணவர்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தலைநகர் வாஷிங்டனில் இருந்து 110 கிமீ  தொலைவில் இந்த பள்ளி அமைந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடப்பது தெரிந்த உடனேயே, பள்ளியை மூடிவிட்டதாக பள்ளி தலைமை தெரிவித்தது. குற்றவாளி உள்ளேயே இருப்பதாக தெரிவித்துள்ளார். போலீசார் அங்கு விரைந்து குற்றவாளியை பிடிக்க முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

கடந்த மாதம் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு, அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை குறைக்க மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மீண்டும் ஒரு பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடந்திருப்பதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close