ஃபேஸ்புக்கை டெலீட் செய்யுங்கள்; பரபரப்பை ஏற்படுத்திய வாட்ஸ்ஆப் நிறுவனரின் ட்வீட்

  முத்துமாரி   | Last Modified : 21 Mar, 2018 03:39 pm


ஃபேஸ்புக் அப்ளிகேஷனை டெலீட் செய்யுங்கள் என வாட்ஸ் ஆப் நிறுவனர் ட்வீட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனம் அனுமதி இல்லாமல் 5 கோடி பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்களை எடுத்துள்ளது பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் தற்போது வாட்ஸ் ஆப்பின் முன்னாள் துணை நிறுவனர் பிரையன் ஆக்டன் ஒரு ட்வீட் செய்துள்ளார். அவர், "இதுவே சரியான தருணம். ஃபேஸ்புக்கை டெலீட் செய்யுங்கள்" என தெரிவித்துள்ளார். 


இந்த பிரையன் ஆக்டன், வாட்ஸ்ஆப் உருவாவதில் முக்கிய காரணமாக இருந்தவர். ஏற்கனவே ஆப்பிள், யாஹூ ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்தார். தகவல் தொழில்நுட்பத் துறையில் இவரின் பங்கு மிக முக்கியமானது.

கடந்த 2014ல் ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் ஆப்பை 19 பில்லியன் டாலர்(ரூ.1,23,500 கோடி) கொடுத்து வாங்கிய பிறகும் பிரையன் ஆக்டன் தொடர்ந்து வாட்ஸ் ஆப்பில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் 'சிக்னல் பவுண்டேஷன்' என்ற புதிய நிறுவனம் ஆரம்பித்ததால் பிரையன் ஆக்டன் வாட்ஸ் ஆப்பில் இருந்து விலகினார். ஏற்கனவே கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா விவாகரத்தில் ஃபேஸ்புக் மீது அதிருப்தியில் இருக்கும் மக்கள் தற்போது பிரையன் ஆக்டன் ட்வீட்டினால் மேலும் பரபரப்பு கிளம்பியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close