தவறுகள் நடந்தது உண்மைதான் - ஃபேஸ்புக் மார்க்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 23 Mar, 2018 12:37 pm


கேம்பிரிட்ஜ் அனலிடிக்கா முறைகேடு விவகாரத்தில் தவறுகள் செய்திருப்பதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் ஒப்புக்கொண்டுள்ளார். 

அமெரிக்க தேர்தல் விவகாரத்தில் பேஸ்புக் மூலம் மோசடி நடந்ததாக வெளியான தகவலையடுத்து பேஸ்புக் நிறுவனம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, பேஸ்புக்கில் உள்ள 5 கோடி  வாக்காளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக செய்திகள் வெளியாகின. 


இந்த விவகாரம் தொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துள்ள ஜூக்கர்பெர்க் பயனர்களின் தகவல்களை பாதுகாக்கும் கடமை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு உண்டு என்றும் அதை செய்ய முடியாவிட்டால் மக்களுக்கு சேவையாற்றும் தகுதி தங்களுக்கு இல்லை என கூறியுள்ளார். இந்த தவறு நடந்தது எப்படி என்பது குறித்து தாம் ஆய்வு செய்து வந்ததாகவும், இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் சில தவறுகள் நடந்துவிட்டிருப்பதாகவும், இவற்றை தவிர்க்க நடவடிக்கை தேவைப்படுவதாகவும் ஜூக்கர்பெர்க் தமது பதிவில் தெரிவித்துள்ளார். தவறுக்கு பொறுப்பேற்றுக்கொண்டுள்ள ஜூக்கர்பெர்க் ஃபேஸ்புக் தளம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார். இதற்காக தாம் எடுக்கவுள்ள நடவடிக்கைகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close