இஸ்ரேல் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி

  Sujatha   | Last Modified : 28 Mar, 2018 06:07 am


இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உடல்நலக்குறைவு காரணமாக ஜெருசலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெஞ்சமின் நேதன்யாகு  அதிக காய்ச்சலை காரணமாக, நேற்று மாலை ஜெருசலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்தது அவருக்கு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, அதில் பெஞ்சமினுக்கு தொடர் இருமலால் காய்ச்சல் வந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்த  முழு அறிக்கை எதுவும் மருத்துவமனை சார்பாக வெளியிடப்படவில்லை.       

நேதன்யாகு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close