'டைம்' சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி!

  Padmapriya   | Last Modified : 30 Mar, 2018 10:15 am

டைம் இதழின் இந்த ஆண்டின் சக்தி வாய்ந்த 100 மனிதர்கள் பட்டியலில் இந்த வருடமும் நரேந்திர மோடியும் இடம்பெற்றுள்ளார்.

டைம் இதழ் சார்பில் ஆண்டுதோறும் 'இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர்' தேர்வு செய்யப்படுவர். இதற்கு முன்னோட்டமாக உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் பிரபலமான 100 பேர் பட்டியலை அந்த இதழ் வெளியிடும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான சிறந்த சக்திவாய்ந்த தலைவராக தேர்வு செய்வதற்காக உலகம் முழுவதும் பிரபலமான 100 பேர் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா இடம் பெற்றுள்ளனர்.


மேலும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், ட்ரம்பின் மகள் இவாங்கா, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க், பிரிட்டன் இளவரசர் வில்லியம், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, கால்பந்து வீரர் ரொனால்டோ உள்ளிட்டோரின் பெயர்களும் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

உலகம் முழுவதும் இருந்து டைம் இணையத்தில் பதிவு செய்யப்படும் வாக்குகளை வைத்து இந்த ஆண்டுக்கான சிறந்த சக்திவாய்ந்த மனிதரை தேர்வு செய்யப்படும். கடந்த ஆண்டும் இந்த பட்டியலில் மோடி இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close