இந்தியாவுக்கு வேலையின்மை தான் பெரிய சவால்: சர்வதேச நிதியம் கருத்து

  Padmapriya   | Last Modified : 31 Mar, 2018 06:15 pm

இந்தியாவில் தற்போது வேலையின்மை பெரும் சவாலாக அமைந்துள்ளதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நிலவும் வேலையின்மை குறித்து அமெரிக்காவில் உள்ள சர்வதேச நிதிய (International Monetary Fund) செய்தி தொடர்பாளர் கெர்ரி ரைஸ் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். 

வேலை தேடுபவர்களுக்கு வேலை வழங்க முடியாமல், குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை வழங்க முடியாமல் காணப்டுகின்றமை, தற்போது இந்தியாவின் சவாலாக அமைகின்றது. இந்நிலையில் தற்போது இந்தியா வளர்ந்து வரும் மிகப்பெரிய நாடு என்ற அடிப்படையில், சில நடவடிக்கைகளை வேலை வாய்ப்பிற்காக எடுத்துள்ளது.

சமீபத்தில் ஜி.எஸ்.டி, தேசிய சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றை அமல்படுத்தி, இதன் மூலம் உற்பத்தி திறனை அதிகரிக்க இந்தியா வழிவகுத்துள்ளது. இந்த செயற்திட்டங்கள் மூலம் வேலை வாய்ப்பை அதிகரிக்க முடிந்தாலும், கணிசமான மாற்றத்தை பார்க்க சில ஆண்டுகளாகும் என ரைஸ் தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close