இஸ்ரேலுக்கு உரிமைகள் உண்டு - சவூதி முடிஇளவரசர் சல்மான்

Last Modified : 04 Apr, 2018 02:48 am


இஸ்ரேல் பலஸ்தீன பிரச்சனையில் முதல்முறையாக, சர்ச்சைக்குரிய நிலப்பகுதியில் இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

சமீப காலமாக, அடிப்படைவாதத்தை விட்டு, சர்வதேச அளவில் அனைவரையும் அரவணைத்து செல்லும் நோக்கில் பல மாற்றங்களை சவூதி அரசு செய்து வருகிறது. இதற்கு மூல காரணமாக இருந்து வருபவர் முடிஇளவரசர் முகம்மது பின் சல்மான். பல கட்டுப்பாடுகளை தளர்த்தி, முதல்முறையாக  சவூதி பெண்கள் வாகனம் ஓட்டுவது, ராணுவத்தில் சேருவது உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்பட்டன. மேலும், சவூதியில் வெளிநாட்டு நிறுவனங்களை முதலிடு செய்ய வைக்கவும் அவர் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அமெரிக்காவுடனும் இணக்கமான உறவை கொண்டுள்ள இளவரசர் சல்மான், சமீபத்தில் அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார். அதன்பின்னர், இஸ்ரேல் பலஸ்தீன விவகாரம் குறித்து அவர் பேசியதாக தெரிகிறது. இஸ்ரேல் பலஸ்தீன பிரச்சனையை தீர்க்கும் பொறுப்பு, ட்ரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னருக்கு   கொடுக்கப்பட்டுள்ளது. அவருடன் சல்மான், நல்ல உறவை கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் விவகாரத்தில், சவூதியின் இறுக்கமான நிலைப்பாட்டை தளர்த்த, சல்மான் சமீப காலமாக ஆலோசனை நடத்தி வந்துள்ளார். சமீபத்தில், சவூதி வழியாக இஸ்ரேல் விமானங்கள் செல்ல அனுமதி அளித்தது அந்நாட்டு அரசு. 

இந்நிலையில் அவர், இஸ்ரேலுக்கு, அந்த பகுதியில் உரிய பங்கு உள்ளதாக தற்போது கூறியுள்ளார். முந்தைய சவூதி அரசுகள், இஸ்ரேலுக்கு அந்த இடத்தில் உரிமை இல்லையென்றும், இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க முடியாது, என்றும் கூறி வந்தன. இந்நிலையில், தங்களுக்கு மிக நெருக்கமான சவூதி அரசு தன்னுடைய நிலைப்பாட்டை இவ்வாறு மாற்றியுள்ளதால், பாலஸ்தீன அமைப்புகளிடையே இது பெரும் குழப்பதை ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close