ரஷ்யாவிடம் என்னைவிட கராராக யாரும் இருந்ததில்லை: ட்ரம்ப்

  Padmapriya   | Last Modified : 05 Apr, 2018 12:20 am

ரஷ்யாவிடம் தன்னைவிட கராரான வகையில் யாரும் நடந்து கொண்டதில்லை, என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப் கூறும்போது, "என்னை காட்டிலும் ரஷ்யாவிடம் கடுமையான நடந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. ஆனாலும், ரஷ்ய அதிபர் புடினுடன் நல்ல உறவில் இருப்பது ஆரோக்கியமான விஷயம். அவ்வாறு இருப்பது என்னுடைய கடமையும் கூட.

ஒரு பக்கம் ரஷ்யாவுடனும், மறுபக்கம் சீனாவுடனும் சேர்ந்து இருப்பது நல்ல விஷயம்தான். இதில் எந்த எதிர்மறையும் கிடையாது. தற்போது நமது பலம் அதிகமாகியுள்ளது. சக்தி வாய்ந்த நாடாகத் திகழ்கிறோம். இது நமக்கு நல்லது. ஆனால், ரஷ்யாவுக்கு ஒன்றும் சாதகம் இல்லை. முக்கியமாக நமது ராணுவபலம் மேலும் சிறப்பாக ஆவது ரஷ்யாவுக்கு உகந்த செய்தியே இல்லை" என கூறினார்.

ரஷ்யாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடிய வேலைகள் சமீப காலமாக இரு தரப்பிலும் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close