இன்னும் ஒரு வாய்ப்பு தாருங்கள்: ஃபேஸ்புக் மார்க் ஜுக்கர்பெர்க் வேண்டுகோள்

  Padmapriya   | Last Modified : 05 Apr, 2018 08:23 pm


சுமார் 8.7 கோடி (80 மில்லியன்} ஃபேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்களை அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா பயன்படுத்தியதாக ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.  இதனை சரிசெய்ய மற்றொரு வாய்ப்பு வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனை ஃபேஸ்புக்கின் தலைமை தகவல் அதிகாரி மைக் ஷொரோஃபர் தெரிவித்துள்ளார். இதனை சரி செய்ய மேம்படுத்தப்பட்ட தகவல் பாதுகாப்பு அம்சங்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக இது, 50 மில்லியன் பயனாளிகளின் விவரங்கள் முறைகேடாக பயன்படுத்தியதாக இதனை அம்பலப்படுத்திய கிறிட்டோஃபவர் வேலி தெரிவித்திருந்தார். 

வாய்ப்புத் தாருங்கள்:

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க் ஜுக்கர்பெர்க், "இது மிகப் பெரிய தவறு. இது என்னுடைய தவறு. இதற்கு நானே பொறுப்பானவன். முன்னதாக, தகவல்களை வழங்கும் தளத்தை ஃபேஸ்புக் வழங்குகிறது. அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது அவர் அவர்களின் பொறுப்பு என கருதினேன். அது தவறான மனப்பான்மை. என்னுடையது குறுகிய எண்ணமாக இருந்துள்ளது. 

இன்று எங்களுக்கு தெரிந்தவரை, நாங்கள் அதிகமான பொறுப்புகளை எடுத்து கொள்ள வேண்டும் என தெரிகிறது. தகவல்களை வழங்கும் தளங்களை உருவாக்குவது மட்டும் எங்கள் பொறுப்பல்ல அதை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணிப்பதும் எங்கள் பொறுப்பு. இதனை சரி செய்ய ஒரு வாய்ப்பு தாருங்கள். ஃபேஸ்புக்கை ஆரம்பித்தது நான் தான். இன்னமும் அதனை வழி நடத்த நானே சரியானவன் என்று நம்புகிறேன்" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close