10 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்கியது ட்விட்டர்

  கனிமொழி   | Last Modified : 06 Apr, 2018 12:12 pm


ஒருபுறம் சமூக வலைதளங்கள் பல்கிப் பெருகி, உலகையே உள்ளங்கைக்குள் கொண்டு வந்தாலும், மறுபுறம் காலை எழுந்தது முதல் தூங்கும் வரை நடந்த எல்லா நிகழ்வுகளையும் அதில் பதிவிடுகிறோம். இவ்வளவு ஏன் இரவு என்ன கனவு வந்தது என்பதைக் கூட அடுத்தநாள் சமூக ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு விட்டு தான் அடுத்த வேலையைப் பற்றி யோசிக்கிறோம். இதனால் தேவையில்லாத பல கஷ்டங்களுக்கு ஆளாகிறோம்.

கடந்த சில நாட்களாக 8.75 கோடி மக்களின் தகவல்களை ஃபேஸ்புக் திருடிவிட்டதாக சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்து, அதை தற்போது மார்க்கும் ஒத்துக் கொண்டுள்ளார். இதனிடையே ட்விட்டர் தற்போது 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் கணக்கை முடக்கியுள்ளது. இந்தக் கணக்காளர்கள் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் விதமாகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் இவர்கள் கருத்துக்களைத் தெரிவித்ததாக ட்விட்டர் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.   

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இந்த மாதிரியான கணக்குகளை ட்விட்டர் முடக்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close