டிரம்ப் டவரில் தீ விபத்து - ஒருவர் உயிரிழந்தார்

  கனிமொழி   | Last Modified : 08 Apr, 2018 09:42 am


அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்புக்கு நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் 58 மாடிகள் கொண்ட பிரமாண்ட கட்டிடம் உள்ளது. இதில் மேற்பரப்பில் உள்ள 3 அடுக்குகளை தனது வீடாக மாற்றி வசித்து வருகிறார். அதிபராகப் பொறுப்பேற்றதும் டிரம்ப் பெரும்பாலும் வாஷிங்டன் நகரில் தான் வசித்து வருகிறார்.   

இந்நிலையில், நேற்று மாலை சுமார் உள்ளூர் நேரப்படி 5.30 மணியளவில் டிரம்ப் டவரின் 50-வது மாடியில் திடீரென தீ பற்றியது. அங்கு பிடித்த தீ மளமளவென பரவியது. தகவலறிந்து அங்கு ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. சுமார் 140க்கும் மேற்பட்ட வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 


டிரம்ப் டவரில் ஏற்பட்ட தீயை போராடி விரைவில் அணைத்த தீயணைப்பு படை வீரர்களுக்கு அதிபர் டிரம்ப் ட்விட்டரில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close