ஜெர்மனியில் சாலையோரம் நின்ற மக்கள் மீது மோதிய கார்; தீவிரவாத தாக்குதலா?

Last Modified : 08 Apr, 2018 11:01 am


ஜெர்மனியில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில், 2 பேர் கொல்லப்பட்டனர். இது தீவிரவாத தாக்குதலா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஜெர்மனியின் முன்ஸ்டெர் என்ற பகுதியில் அமைந்துள்ள மதுபான கடைக்கு வெளியே நேற்று நள்ளிரவு நின்று மது அருந்திக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது, அந்த வழியாக வந்த கார் அதிவேகமாக மோதியது. வண்டியின் ட்ரைவர் நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டியதால், இது விபத்து அல்ல என தெரிய வந்தது. சம்பவத்தை தொடர்ந்து, வண்டியின் ட்ரைவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 

அந்த கார் மோதியதில், பொதுமக்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தீவிரவாத தாக்குதல் என்பதை குறிக்கும் எந்த அறிகுறியும் தற்போது இல்லையென, ஜெர்மன் போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close