சிரியாவில் ஏவுகணை தாக்குதல்; அமெரிக்கா காரணமா? (வீடியோ)

  SRK   | Last Modified : 09 Apr, 2018 02:26 pm


சிரியாவின் ஹோம்ஸ் பகுதியில் உள்ள விமானப்படை தளத்தில் இன்று தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா தான் காரணம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று சிரியாவில் நடந்த ரசாயன குண்டு தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு சிரிய அரசு படைகள் தான் காரணம் என, அங்கு இயங்கி வரும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து சர்வதேச நாடுகள் சிரிய அரசு தன மக்கள் மீதே நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சிரிய அதிபர் பஷார் அல் சாத்தை 'ஒரு மிருகம்' என விமர்சித்து, "இந்த கொடூர தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்", என ட்விட்டரில் எழுதினார். 

இந்நிலையில் இன்று சிரியாவின் ஹோம்ஸ் பகுதியில் உள்ள டைஃபூர் விமானப்படை தளத்தை நோக்கி பல ஏவுகணைகள் ஏவப்பட்டன. இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக சிரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 8 ஏவுகணைகளை சிரிய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளது. 


சமூக வலைதளங்களில், லெபனான் மக்கள் பதிவேற்றிய வீடியோக்களில், சிரியாவை நோக்கி செல்லும் ஏவுகணைகள் தெரிகின்றன. இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அரசு தான் காரணம் என சிரியா குற்றம் சாட்டினாலும், அமெரிக்க ராணுவம் இதை முற்றிலும் மறுத்துவிட்டது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close