பிரிட்டன் இளவரசர் திருமணத்திற்கு தெரசா மே, ட்ரம்ப், ஒபாமாவுக்கு நோ அழைப்பு!

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2018 10:58 am


பிரிட்டன் நாட்டின் இளவரசர் ஹேரியின் திருமணத்திற்கு, தெரசா மே, டொனால்ட் ட்ரம்ப், பராக் ஒபாமா ஆகிய பிரபல அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

பிரிட்டன் இளவரசர் ஹேரி, அமெரிக்க தொலைக்காட்சி நடிகையான மேகன் மார்கில்லை அடுத்த மாதம் திருமணம் செய்கிறார். மிக மிக பிரம்மாண்டமாக நடைபெறும் பிரிட்டன் அரச குடும்பத்தின் திருமண விழாக்களுக்கு உலகின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். ஆனால்,  இந்தமுறை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட மாட்டாது என சில வாரங்களுக்கு முன் தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷேலுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது. இளவரசர் ஹேரியும், அதிபர் ஒபாமாவும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், பிரிட்டன் பிரதமர் தெரசா மே, மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பின் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. 

திருமணம் நடக்கும் தேவாலயம் சிரியது என்பதாலும், இளவரசர் ஹேரிக்கு முன் அரியணைக்கு தகுதியான 4 பேர் இருப்பதனாலும், இந்த திருமண விழாவிற்கு முக்கிய அரசியல் தலைவர்களை அழைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வை ஒட்டி, பொதுமக்கள் 1200 பேர் அரண்மனைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதில், கடந்த வருடம் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிர்பிழைத்த 12 வயது சிறுமியும் அடங்குவார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close