ரஷ்யா தயாராக இருக்கவும்; ஏவுகணைகள் வருகிறது!: ட்ரம்ப் எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2018 10:41 am


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நேற்று ரஷ்யா மற்றும் சிரியாவுக்கு ட்விட்டரில் எச்சரிக்கை விடுத்தார். 

சிரியாவின் டூமா நகரில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட ரசாயன குண்டு தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து, சிரிய அதிபர் பஷார் அல் சாத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்தார். சிரிய அதிபரை மிருகம் எனவும் விமர்சித்திருந்தார். ரஷ்ய அதிபர் புடினின் ஆதரவுடன் அல் சாத் செயல்பட்டு வரும் நிலையில், அதிபர் ட்ரம்ப் நேற்று சிரியாவை தாக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தனது ட்விட்டர் கணக்கில் இதுகுறித்து எழுதிய ட்ரம்ப், "சிரியாவை நோக்கி வரும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவோம் என ரஷ்யா தெரிவித்துள்ளது. தயாராக இருங்கள் ரஷ்யா. பல புது, நவீன ஏவுகணைகள் வரப் போகின்றன. அந்த மிருகத்துடன் நீங்கள் கூட்டணி வைத்திருக்க கூடாது" என எழுதினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close