வெள்ளை மாளிகையின் 'மாஃபியா தலைவன்' ட்ரம்ப்: கோமி விமர்சனம்

  Padmapriya   | Last Modified : 13 Apr, 2018 09:25 pm

அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையின் 'மாஃபியா பாஸ்' ட்ரம்ப் என எஃப்.பி.ஐ. முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் கோமி விமர்சித்துள்ளார். 

ட்ரம்ப் அவ்வப்போது தனக்கே உரிய வகையில் சில சர்சையான கருத்துகளை உதிர்ப்பது வழக்கம். அதனை பொது வெளியில் இப்படி விமர்சித்திருக்கிறார் ஜேம்ஸ் கோமி. 

எஃப்.பி.ஐ. முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் கோமி A Higher Loyalty: Truth, Lies and Leadership என்ற நூலை எழுதியுள்ளார். அதில் தான் இவ்வாறு விமர்சித்துள்ளார். 

எஃப்.பி.ஐ. இயக்குநராக தாம் இருந்தபோது அதிபர் ட்ரம்ப் நடந்துகொண்ட முறை மாஃபியா தலைவனை நினைவூட்டியதாக ஜேம்ஸ் கோமி குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் அறநெறிகள் இல்லாதவர் என்றும், உண்மைக்கும் அதிபர் பதவிக்கான மதிப்பீடுகளுக்கும் கட்டுப்படாதவர் என்றும் தமது நூலில் ஜேம்ஸ் கோமி எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வாரத்தில் இந்த நூல் வெளியாக உள்ள நிலையில், ஊடகங்களில் இந்த விவரங்கள் கசிந்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close