அமெரிக்க முன்னாள் அதிபர் எச்.டபுல்யூ. புஷ்சின் மனைவி காலமானார்

Last Modified : 18 Apr, 2018 08:05 am

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபுல்யூ. புஷ்சின் மனைவியும், ஜார்ஜ் டபுல்யூ. புஷ்சின் தாயாருமான பார்பரா புஷ் மரணமடைந்தார். அவருக்கு வயது 92. 

அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்த ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்சின் மனைவி பார்பரா புஷ் (வயது 92). இவர்களது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் (71), இவர் 43-வது அதிபராக பதவி வகித்தவர்.

சில நாட்களுக்கு முன் பார்பரா புஷ் உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளதாக ஹூஸ்டனில் உள்ள முன்னாள் அதிபரின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் அந்த அறிக்கையில், உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ள பார்பரா புஷ் விரைவில் நலம்பெற வேண்டும் என பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், பார்பரா புஷ் தனது 92வது வயதில் இன்று மரணமடைந்ததாக முன்னாள் அதிபர் குடும்பத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close