லண்டனிலும் மோடிக்கு கருப்புக்கொடி #ModiNotWelcome

  ஐஸ்வர்யா   | Last Modified : 18 Apr, 2018 09:54 pm


லண்டன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் #ModiNotWelcome என்ற கோஷங்கள் மற்றும் பதாகைகளை ஏந்தி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். 

அரசுமுறை பயணமாக ஸ்வீடன் சுற்றுப்பயணத்தை முடித்த பின்னர் பிரதமர் மோடி, இன்று லண்டன் சென்றுள்ளார். அங்கு நடைபெறும் காமன்வெல்த் நாட்டுத் தலைவர்களின் கூட்டத்தில் மோடி பங்கேற்று பேசினார். இதையடுத்து வெளியே வந்த மோடிக்கு எதிராக லண்டனில் வாழும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


மோடியின் வெளிநாட்டு பயணத்தால் இந்தியாவின் மதிப்பு உயர்வதுடன், மற்ற நாடுகளுடன் இந்தியாவின் கலாச்சார, வர்த்தக, பாதுகாப்பு உறவு வலுப்பெற்றுள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது. பிரதமர் மோடி 12 நாடுகளுக்கு பயணம் செய்ததன் விளைவாக இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 27 சதவீதம் அதிகரித்து 3,093 கோடி டாலராக உயர்ந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

இந்நிலையில் கத்துவாவில் சிறுமி ஆசிஃபா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது, தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது, உத்திர பிரதேசம் மாநிலம் உன்னவோ சிறுமி பாஜக எம்.எல்.ஏவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து, பிரதமர் மோடிக்கு எதிராக லண்டன் டவுனிங் பகுதியில் கோஷங்களை எழுப்பி, #ModiNotWelcome என்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் 2015 ஆம் ஆண்டும் பிரிட்டன் சென்ற மோடிக்கு எதிர்ப்புக்கள் கிளம்பியது குறிப்பிடதக்கது. 


முன்னதாக கடந்த வாரம் சென்னை அருகே திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியில் பங்கேற்க வந்த மோடிக்கு திமுக, உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நெட்டிசனகள் அவர்கள் பங்குக்கு #GoBackModi என்ற ஹேஷ்டேக்கில் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ட்விட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் உலக ட்ரெண்டிங்கில் பல மணிநேரம் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close