நடுவானில் வெடித்த விமான எஞ்சின்; வெளியே இழுக்கப்பட்ட பெண் பயணி

  SRK   | Last Modified : 18 Apr, 2018 10:36 pm


அமெரிக்காவின் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில், ஒரு பெண் பயணி, வெளியே இழுக்கப்பட்டு, பின்னர் மற்ற பயணிகளால் காப்பாற்றப்பட்டார். ஆனால், காயம் காரணமாக உயிரிழந்தார்.

நியூயார்க்கில் இருந்து டல்லாஸ் நகருக்கு சென்ற சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம், சுமார் 32,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது, திடீரென ஒரு பக்க எஞ்சின் வெடித்தது. அப்போது, ஒரு பெண் பயணி அமர்ந்திருந்த இடத்தில் ஓட்டை விழுந்து அவர் வெளியே இழுக்கப்பட்டதாக தெரிகிறது. 

ஆனால், சில பயணிகள் ஒன்று சேர்ந்து அந்த பெண்ணை இழுத்து காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். அவர் பத்திரமாக உள்ளே இழுக்கப்பட்ட பின், விமானத்தில் இருந்த மருத்துவர்கள், அவருக்கு முதலுதவி செய்துள்ளனர். ஆனால், பலத்த காயம் காரணமாக அவர் உயிரிழந்துவிட்டார். 7 பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்தனர். 

சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், "அந்த பெண் வெளியே இழுக்கப்பட்ட பின், ஒரு பயணி முன்னே சென்று, அவரை பிடித்து இழுத்தார். அவரால் முடியவில்லை என்றவுடன், சிலர் அவருக்கு உதவினர்" என்றார்கள். 

எஞ்சின் வெடித்தாலும் கூட, விமானத்தை ஆபத்தான கட்டத்தில் இருந்து பத்திரமாக கொண்டு வந்து அருகே இருந்த விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார்கள் விமானிகள். விமானத்தை இயக்கிய பெண் பைலட்டை, பயணிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். "அவ்வளவு குழப்பத்தில் கூட, விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்ட பின், அந்த பெண் விமானி எந்த வித நடுக்கமும் இல்லாமல், வந்து பயணிகளை நலம் விசாரித்தார். உண்மையான இரும்புப் பெண்மணி அவர்தான் " என்றார் ஒரு பயணி. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close