அமெரிக்கா: ஜார்ஜ் புஷ் சீனியர் மருத்துவமனையில் அனுமதி

  Sujatha   | Last Modified : 24 Apr, 2018 09:14 am


அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்(93),  இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர் கடந்த புதன் கிழமை(18-4-2018) அன்று காலமானார்.

இந்நிலையில் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் உடல்நலக்குறைவு காரணமாக 'ஹூஸ்டன் மெத்தடிஸ்ட்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் புஷ்ஷின் ரத்தத்தில் நோய் தொற்று கிருமிகள் பரவி இருப்பதாக மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளனர். தற்போதைய தகவலின் அடிப்படையில் புஷ்ஷின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.        

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close