கல்பனா சாவ்லா அமெரிக்காவின் ஹீரோ: டிரம்ப் புகழாரம்

  Newstm Desk   | Last Modified : 02 May, 2018 05:42 pm

விண்வெளி ஆராய்சிக்காக தன் வாழ்க்கையே அர்ப்பணித்த கல்பனா சாவ்லா அமெரிக்காவின் ஹீரோ என்று அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டி உள்ளார். 

மே மாதத்தை ஆசிய-பசிபிக் அமெரிக்க தீவுகளின் பாரம்பரிய மாதமாக அறிவித்திருந்தது அமெரிக்க அரசு. இதனையொட்டி நேற்று அங்கு நடந்த பாரம்பரிய மாதத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றினார். 

அவர் பேசுகையில், "இந்திய வம்சாவளியான கல்பனா சாவ்லா தனது வாழ்க்கையை விண்வெளி ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்தவர். அவர் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு அமெரிக்காவின் ஹீரோவானர். அமெரிக்காவில் வாழும் எண்ணற்ற பெண்களுக்கு கல்பனா சாவ்லா முன்னுதாரணமாக உள்ளார். அவரது ஒவ்வொரு செயல்படும் அமெரிக்கர்களுக்கும், பெண்களும் உத்வேகம் அளிக்கக்கூடியவை. கல்பனாவின் சாதனைகளை உணர்ந்து அவரது மறைவிற்கு பின்னும் விருதுகளை அளித்து வருகிறது அமெரிக்க அரசு" என்று கூறினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close