ஈரான் ஒப்பந்தத்திலிருந்து விலகினால் போர் மூளும்: ஐ.நா. எச்சரிக்கை

Last Modified : 03 May, 2018 09:04 pm

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறினால் போர் மூளும் அபாயம் உள்ளது என ஐ.நா. பொதுச் செயலாளரான அன்டோனியோ கட்டெரஸ் எச்சரித்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு அமேரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொண்டது. ஆனால் அப்போது மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் அவசியமற்றது என்றும் ஈரான் அதனை மீறி செயல்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  கூறி வருகிறார். 

தற்போது அணுசக்தி ஒப்பந்தத்தில் நீடிக்க வேண்டுமா என்று முடிவெடுக்க ட்ரம்பிற்கு வரும் மே 12ம் தேதி வரை அவகாசம் உள்ளது.

இந்த நிலையில், ஐ .நா. பொது செயலாளரான அன்டோனியோ கட்டெரஸ் இது குறித்து தொலைக்காட்சி ஒன்றிற்கு கூறுகையில், "ஈரானுடனான இந்த உடன்படிக்கை ஒரு முக்கிய ராஜதந்திர வெற்றி.  இது தொடர்ந்து நீடிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், போர் மூளும் அபாயம் உள்ளது.  இதற்கு நல்ல தீர்வு அல்லது மாற்று யோசனை இல்லாமல் ஒப்பந்தத்தை அகற்றக் கூடாது. அப்படி செய்தால் அபாயகரமான சூழலை சந்திக்க நேரிடும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, அணு ஆயுத திட்டத்தை ஈரான் ரகசியமாக தொடர்ந்து வந்துள்ளதை நிரூபிக்கும் "ரகசிய அணு கோப்புகள்" என்ற சில கோப்புகளை இஸ்ரேல் வெளியிட்டது நினைவுகூறத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close