ட்ரம்ப் நிர்வாண சிலை! - 18 லட்சத்துக்கு ஏலம் எடுத்த அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்

  Padmapriya   | Last Modified : 04 May, 2018 03:25 am

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ட்ரம்ப்புக்கு எதிரான கவன ஈர்ப்பை மேற்கொள்ள வடிக்கப்பட்ட அவரது நிர்வாண சிலையை தற்போது ஆராய்ச்சியாளர் ஒருவர் 18 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். 

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் போட்டியிட்டதை எதிர்த்து பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது கவனத்தை ஈர்ப்பதற்காக வெஸ்ட் கோஸ்ட் அனார்சிஸ்ட் என்ற நிறுவனம் ட்ரம்ப்பை போல ஐந்து நிர்வாண சிலைகளை தயாரித்து காட்சிப்படுத்தி வைத்தது.

இதில், 4 சிலைகள் ட்ரம்ப் ஆதரவாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு சிலை மட்டும் எப்படியோ தப்பியது. இந்நிலையில், அந்த சிலை சமீபத்தில் ஏலத்துக்கு வந்தது. ஆராய்ச்சியாளர் ஸாக் பாகான்ஸ் என்பவர் ட்ரம்ப் சிலையை இந்திய மதிப்பில் சுமார் 18 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துள்ளார்.

அமானுஷ்ய ஆராய்ச்சியாளரான ஸாக் பாகான்ஸ், லாஸ் வேகாஸ் நகரில் உள்ள மியூசியத்தில் இந்த சிலையை வைக்க போவதாக கூறியுள்ளார். 

இந்த ஏல விவகாரம் அமெரிக்காவில் கலாய்ப்புக்கு உண்டாகியுள்ளது. மேலும் சிலர், எப்படியோ ட்ரம்ப் நிர்வாண சிலையை வைத்து சூனியம் செய்து அமெரிக்காவை அவரிடமிருந்து மீட்டால் சரி எனவும் கிண்டலடிக்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close