துப்பாக்கிச் சூடு நடந்த பள்ளிக்குள் நான் ஆயுதமில்லாமல் ஓடியிருப்பேன்: டிரம்ப்

  SRK   | Last Modified : 27 Feb, 2018 02:16 am


அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தினால் ஏற்பட்ட அதிர்வலைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை.

துப்பாக்கி கலாச்சாரத்தை குறைக்கவும், கனரக துப்பாக்கிகளை பொதுமக்கள் கைகளுக்கு வரவிடாமல் செய்வதற்கும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால்,  துப்பாக்கி உரிமைகள் மீது எந்த மாற்றமும் கொண்டு வரக்கூடாது என்பதில் டிரம்ப் உட்பட அவரது கட்சியினர் திட்டவட்டமாக உள்ளனர். மேலும், பள்ளிகளில் ஏற்படும் துப்பாக்கிச் சூட்டை தடுக்க, ஆசிரியர்களிடம் துப்பாக்கிகளை கொடுக்க வேண்டும் என டிரம்ப் கூறினார். இது மேலும் சர்ச்சையை கிளப்பியது. 

துப்பாக்கியுடன் இருந்து காவல்துறை அதிகாரி ஒருவர்  துப்பாக்கிச் சூடு நடந்த போது, பள்ளிக்குள் செல்ல பயந்து வெளியே மறைந்து கொண்டிருந்தது தெரிய வந்தது. அதை காரணமாக வைத்து, காவல்துறையின் தவறான போக்குதான் இந்த சம்பவத்துக்கு காரணம் என டிரம்ப் தற்போது கூறியுள்ளார். 

"நானாக இருந்திருந்தால், துப்பாக்கி இல்லாவிட்டாலும், பள்ளிக்குள் சென்றிருப்பேன். இங்குள்ள பலரும் சென்றிருப்பார்கள்" என டிரம்ப் கூறியுள்ளார்.

டிரம்ப் மற்றும் குடியரசு கட்சியினருக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். அமெரிக்காவின் தேசிய ரைபிள் கூட்டமைப்பு (NRA) என்ற அமைப்பு தான், துப்பாக்கி உரிமைகள் மீது எந்த மாற்றமும் கொண்டு வரக்கூடாது என வலியுறுத்தி வருகிறது. பெரும் அரசியல் பலம் கொண்ட அந்த அமைப்புக்கு எதிராக செல்ல ஆளும்கட்சி எம்.பி.க்கள் மறுத்து வருகின்றனர். 

இந்நிலையில், ப்ளோரிடா துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து,அந்த அமைப்பின் முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால், பல்வேறு தனியார் நிறுவனங்கள், NRA-வுடன் தாங்கள் வைத்திருந்த தொடர்பை துண்டித்துள்ளனர். இது டிரம்ப்புக்கு மற்றும் ஆளும் குடியரசு கட்சிக்கு, மேலும் நெருக்கடி கொடுத்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close