ரகசிய ஆவணங்களை பார்க்க டிரம்ப் மருமகனுக்கு தடை

  SRK   | Last Modified : 28 Feb, 2018 11:43 am


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னருக்கு, அந்நாட்டின் உச்சகட்ட ரகசிய ஆவணங்களை பார்க்க வழங்கப்பட்ட உரிமை ரத்து செய்யபட்டுள்ளது.

அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன், அவரது மகள் இவான்கா மற்றும் மருமகன் குஷ்னர் இருவரும் வெள்ளை மாளிகையில் ஆலோசகர் பணியில் அமர்த்தப்பட்டனர். சுத்தமாக அரசியல் அனுபவமே இல்லாத அவர்கள் இருவரும் எப்படி வெள்ளை மாளிகைக்குள் அரசு பணிகளில் தலையிட முடியும் என எதிர்ப்பு கிளம்பியது.

அமெரிக்க அரசு மற்றும் ராணுவ ரகசியங்களை கொண்ட ஆவணங்கள் பல, குஷ்னரை தாண்டியே டிரம்புக்கு செல்வதாக புகார் எழுப்பப்பட்டது. சாதாரண குடிமகன், அதுவும் ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபராக இருக்கும் குஷ்னருக்கு தொடர்ந்து இதுபோன்ற உரிமைகள் வழங்கப்படுவது பல கேள்விகளை எழுப்பியது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் பணியாற்ற பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்பங்களில், குஷ்னர் பல தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டதாக தெரிய வந்தது. அந்த விண்ணப்பங்களை பலமுறை திரும்பப்பெற்று, அவர் மாற்றி எழுதினார். இதனால், ரகசிய ஆவணங்களை பார்க்க வழங்கப்படும் நிறைந்த உரிமை கிடைக்காமல், தற்காலிக உரிமை மட்டுமே குறிப்பிட்ட காலத்திற்கு குஷ்னருக்கு வழங்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், உச்சகட்ட ரகசிய (Top Secret) ஆவணங்களை இதுவரை பார்க்க வழங்கப்பட்டு வந்த தற்காலிக உரிமத்தை, வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி ஜான் கெல்லி ரத்து செய்துள்ளார். குஷ்னர் மட்டுமல்லாமல், மேலும் சில வெள்ளை மாளிகை அதிகாரிகளின் உரிமமும் இதுபோல ரத்து செய்யப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close