அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு; 2 பேர் பலி

  SRK   | Last Modified : 02 Mar, 2018 10:39 pm


இன்று அமெரிக்காவின் மிஷிகன் மாகாண பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். 

மர்ம நபர் ஒருவர் பல்கலைக்கழகத்தினுள் புகுந்து இருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு மாயமானார். குற்றவாளி இன்னும் பல்கலைக்கழகத்தினுள் இருப்பதாக சந்தேகம் உள்ளதால், அனைத்து மாணவர்களும் அவரவர் வகுப்புகளில் பதுங்கி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த பதட்டமான சூழ்நிலையில் பல்கலைக்கழகம் தற்போது மூடப்பட்டுள்ளது. 

தேர்வு முடியும் நாள் என்பதால், பல மாணவர்களின் பெற்றோர்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்களை உள்ளே அனுமதிக்காமல் போலீசார் குற்றவாளியை தேடி ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இறந்த இரண்டு பேரும் மாணவர்கள் இல்லை என கூறப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close