மலாலாவை கொல்ல திட்டமிட்ட தீவிரவாதி தலைக்கு ரூ.33 கோடி பரிசு

  PADMA PRIYA   | Last Modified : 10 Mar, 2018 05:12 pm

ஆப்கானிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தி வரும் பாகிஸ்தானின் தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மவுலானா பசுல்லா தலைக்கு அமெரிக்கா ரூ.32 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது.

இரட்டை கோபுரத் தாக்குதலை அடுத்து ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முகாமிட்டு சண்டையிட்டு வருகிறது. இதன் விளைவாக, அல்-காய்தா அமைப்பின் தீவிரவாத செயல்பாடுகள் ஓரளவுக்கு ஒடுக்கப்பட்டுள்ளன. எனினும், அங்கு தலிபான் அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தி வரும் தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா பசுல்லா குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.32 கோடி சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அமெரிக்கா விடுத்துள்ளது. 

இந்த தலைவர் மவுலானா பசுல்லா, கடந்த 2014-ம் ஆண்டு பெஷாவர் ராணுவ பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி 150 பள்ளி குழந்தைகளை கொன்றவன். மேலும் 2012-ம் ஆண்டில் பள்ளி மாணவி மலாலா பூசுப்சாயை சுட்டுக்கொல்ல முயன்றவன் ஆவான்.

இதுதவிர, ஜமாத் - உல் - அஹ்ரார் அமைப்பின் தலைவர் அப்துல் வாலி மற்றும் லஷ்கர் - இ - இஸ்லாம் தலைவர் மங்கள் பாஹ் ஆகியோர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு தலா ரூ.20 கோடி சன்மானம் அளிக்கப்படும் எனவும் அமெரிக்க அரசு கூறியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close